பாமக கவுன்சிலரை உருட்டு கட்டையால் ஓடஓட விரட்டி அடித்த திமுகவினர் - அதிர்ச்சி காட்சிகள்
விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பத்தில் முன்விரோதம் காரணமாக பாமக கவுன்சிலரை திமுக நிர்வாகிகள் உருட்டு கட்டையால் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக கவுன்சிலர் சிவராமன் வீட்டின் எதிரே திமுக நகரப் பொருளாளர் தட்சிணாமூர்த்திக்குச் சொந்தமான தென்னை மரங்களில் இருந்து தேங்காய் விழுந்ததை சிவராமன் தட்டிக்கேட்டார். அதற்கு சிவராமனை திமுகவினர் சரமரியாக உருட்டு கட்டையால் தாக்கி, ஓடஓட விரட்டி அடித்தனர். இதுதொடர்பாக, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.