விழுப்புரத்தில் கோர தாண்டவமாடிய வெள்ளம் இரவு நடந்த கொடூர சம்பவம் நடுரோட்டிற்கு வந்த மக்கள்
- விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். முகாமில் உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி குழந்தைகளோடு அவதியுறுவதாக வேதனை தெரிவித்த அவர்கள், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து தங்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.