"எங்க பிள்ளைகள் கையில் கத்தி வர கூடாது" - திருந்தி வாழ எஸ்.பி-யை தேடிவந்த டாப் ரவுடிகள்
விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ரவுடிகள் ராஜ்குமார் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் தாங்கள் திருந்தி வாழப் போவதாக கூறி மனு அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் மற்றும் அரோபன். இருவரும் ரவுடிகளான நிலையில், இரண்டு அணிகளாக பிரிந்து கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். ராஜ்குமார் மீது ஒன்பது கொலை வழக்குகளும், அரோபன் மீது நான்கு கொலை வழங்குகளும் உள்ளன. மேலும், பல குற்ற வழக்குகளில் சிக்கி சிறை சென்று வந்த நிலையில், இருவரும் தாங்கள் சமாதானமாகி விட்டதாகவும், தங்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளதால் திருந்தி வாழ போவதாகவும் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.