இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்தவர் - பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.. திகைக்க விடும் பின்னணி
இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பின்னணி குறித்து பார்க்கலாம்...
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்ட வி.நாராயணன், இஸ்ரோவில் சுமார் 40 ஆண்டு காலம் பணியாற்றி வருகிறார். பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள இவர், ராக்கெட் மற்றும் விண்கல உந்துதல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்....
காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டியில் படித்த வி.நாராயணன், ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் (AERO SPACE ENGINEERING) டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஐ.ஐ.டி காரக்பூரில் எம்.டெக் (M.TECH) படித்தபோது சிறந்த மாணவராக விளங்கி பதக்கம் பெற்றுள்ளார்....
ஆஸ்ட்ரோனேட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியாவின் (ASTRONAUTICAL SOCIETY OF INDIA)கோல்டு மெடலும் பெற்றுள்ள இவர், இஸ்ரோவில் பல்வேறு திட்டங்களில் சிறப்பாக பணியாற்றியதற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் திட்டத்திற்கு CE20 கிரையோஜினிக் என்ஜின் உருவாக்கியதில் இவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது... இஸ்ரோவின் கனவு திட்டமான ஆதித்யா விண்கல திட்டம், சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 உள்ளிட்ட திட்டங்களிலும் இவர் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இஸ்ரோ தலைவராக வருகிற 14ம் தேதி பதவியேற்கும் வி.நாராயணன், அடுத்த 2 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்