``இந்த கிழங்கை பயன்படுத்தாதீங்க.. மாறும் முகம்.. உயிரே போகலாம்'' - எச்சரிக்கை மக்களே

Update: 2025-01-08 06:02 GMT

கொடைக்கானலில் குதிரை தாலி கிழங்கினை இளைஞர்கள் மூக்கில் நுகரும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போதை தடுப்பு அமலாக்க துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கவுஞ்சி மலைக்கிராமத்தில் ராஜ் என்பவர் குதிரை தாலி கிழங்கை நுகர்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுவதாக வீடியோவை பகிர்ந்தார். இதனை அறிந்து ஏராளமான இளைஞர்கள் 600 ரூபாய் கொடுத்து குதிரை வாலி கிழங்கை நுகர்ந்து, அதனை வீடியோவாக பகிர்ந்தனர். இதுகுறித்து நேரில் விசாரித்த அதிகாரிகள், குதிரை தாலி கிழங்கை உபயோகிக்கக்கூடாது என எச்சரித்ததோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என குதிரை வாலி ராஜ்ஜிடம் வாக்குமூலம் பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்