"கடைக்கு போனா தனியா கவருக்கு காசு கொடுக்கிறீங்களா?" - ஒருத்தருக்கு ரூ.15 ஆயிரம் கிடைச்சிருக்கு..!

Update: 2025-01-08 05:59 GMT

வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான பைகள் இலவசமாக வழங்கப்பட மாட்டாது என கடைகளில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஜவுளிக் கடையில் 8 ஆயிரம் ரூபாய்க்கு ஜவுளி வாங்கிய ஸ்ரீதர் என்பவர், அவற்றை வைப்பதற்கான காகிதப் பை-க்கு 16 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும்,, எந்த அறிவிப்புப் பலகையும் வைக்காமல், பைகளுக்கு கட்டணம் வசூலித்தது சேவைக் குறைபாடு என்பதால் 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்,, சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், பொருட்களை எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் பைகள் இலவசம் கிடையாது.... தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

அறிவிப்புப் பலகை வைக்காமல் வாடிக்கையாளர்களிடம் பைகளுக்கு தனியாக கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என்று தெரிவித்துள்ள நீதிமன்றம்,மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்குச் செலவாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என ஜவுளிக் கடைக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்