வெறித்தனமான ரசிகன்..."விஜய்க்காக என் மகன் உயிரையே விட்டான்" - கண்ணீர் விட்டு கதறும் தாய்

Update: 2024-10-30 06:23 GMT

வெறித்தனமான ரசிகன்..."விஜய்க்காக என் மகன் உயிரையே விட்டான்" - கண்ணீர் விட்டு கதறும் தாய்

த.வெ.க மாநாட்டிற்கு சென்ற சென்னை ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகன் மற்றும் உறவினர்களை இறந்தவர்களின் கண்ணீரை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

இப்படி கண்ணீர் விட்டு கதறுகிறார்கள் விஜய் மாநாட்டிற்கு சென்று இறந்தவர்களின் தாய்மார்கள்......

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டிற்கு வந்தவர் 6 பேர் மரணமடைந்தனர். மாநாடு பணி முடித்து விட்டு சென்ற போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை பாரிமுனை பகுதியைச் சேர்ந்த வசந்த், ரியாஸ் இருவரும் நெருங்கிய நண்பர்கள். நெருக்கமான நண்பர்களாக இருப்பது போலேவே "வெறித்தனமான" நடிகர் விஜய்யின் ரசிகர்கள். அவரது படம் ரிலீஸ் ஆனாலே இவர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம். முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று தியேட்டரை ரணகளப்படுத்துவது வசந்த், ரியாஸ் இருவரது வழக்கம்.

இதே போல விஜய்யின் மாநாட்டிற்கு நண்பர்கள் 10 பேர் இணைந்து 5 இருசக்கர வாகனத்தில் சென்ற பிளான் போட்டு, வசந்த், ரியாஸ் தனி பைக்கில் ஒன்றாக தவெக மாநாட்டிற்கு சென்றனர். தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே அதிவேகமாக சென்று லாரி மீது மோதி, இருவரும்

உயிரிழந்தனர்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த வசந்த், ரியாஸ் ஆகியோர், சாலையோர குடிசையில் வசித்து வந்தனர். தங்கள் குடும்பத்தை வழி நடத்தியதையே தனது மகன் வசந்த் தான் என்றும், இப்போ அவன் இல்லாததை நினைக்க முடியவில்லை என்று வேதனை தெரிவிக்கிறார்

வசந்தின் தாய் தேவி.

நீண்ட தூரம் இருப்பதால் போக வேண்டாம் என்று மறுத்த நிலையிலும் விஜய்க்காக, வசந்த் சென்றதாக வேதனை தெரிவிக்கின்றனர் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள்.

குழந்தையில் இருந்தே விஜய்யின் பைத்தியம் தனது மகன் என்றும், விஜய்க்காகவே உயிர் விட்டிருப்பதாக கண்ணீர் மல்க கதறுகிறார் ரியாஸின் தாயார் கல்பனா.

பைக்கில் மாநாட்டிற்கு வர வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிருமான விஜய், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அதை ஏற்காமல் சென்ற இளைஞர்கள் உயிரிழந்தது தமிழக வெற்றிக்கழகத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்