மெடிக்கல் மிராக்கிள்.. எப்படிங்க இது சாத்தியம்? - மருத்துவ உலகையே வாயடைத்து போக வைத்த விஜய்

Update: 2024-09-10 10:54 GMT

நடிகர் விஜயால் சிறப்புக்குழந்தை ஒன்றின் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்கள், அனைவரையும் நெகிழச்செய்யும் வகையில் உள்ளது.

கன்னியாகுமரியை சேர்ந்த சிறப்பு குழந்தை ரிஷான். பெருமூளை வாதம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட இவர், நடிகர் விஜயின் தீவிர ஃபேன். நடப்பதில் சிரமம் இருக்கும் இவர், விஜய் பாடலை கேட்டால் வீல்சேரில் இருந்து எழுந்து ஆட முயற்சிக்கிறார். இதனால், கீழே விழுந்து பல நாட்கள் காயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோட் படப்பிடிப்பின்போது, நடிகர் விஜயை நேரில் பார்த்த இவர், உணர்ச்சி வசத்தால் நடிகர் விஜயை எழுந்து கட்டிப்பிடித்து விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த சம்பவத்திற்குப்பிறகு ரிஷானின் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதை உணர்ந்த பெற்றோர், மீண்டும் நடிகர் விஜயை நேரில் பார்க்க வைக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இதற்காக நீலாங்கரை வீட்டு வாசலில் பல மணிநேரங்களாக காத்துக்கிடந்த அவர்களுக்கு, இந்த முறை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்