நட்டநடு ரோட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி கொடூர கொ*ல..தூத்துக்குடியை அலறவிட்ட சம்பவம்..பகீர் பின்னணி

Update: 2024-12-18 08:06 GMT

முத்தையாபுரம் துறைமுகச் சாலையில், சண்முகபுரம் அருகே ஒருவர் கொல்லப்பட்டு கிடந்தது குறித்து அவ்வழியாகச் சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முத்தையாபுரம் அருகே சூசைநகரை சேர்ந்த 50 வயதாகும் தேம்பாவணி, மூட்டை தூக்கும் வேலை பார்த்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் 3 மகன், ஒரு மகள் உள்ளனர். மகன்கள் கஞ்சா போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களுடன் பழக்கத்தில் இருந்ததால், தேம்பாவணியின் மனைவி, இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு ராஜபாளையம் சென்றுவிட்டார். ஒரு மகள், ஒரு மகனுக்கு திருமணமாகியுள்ளது. தேம்பாவணி அப்பகுதியில் கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வீட்டில் இருந்துள்ளார். தினசரி மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படும் நிலையில், மது போதையில் உடன் இருந்தவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டாரா? அல்லது முன் விரோதம் காரணமா? என்ற கோணத்திலும், சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்