"காரில் இப்படியொரு அறையா?" - போலீசையே அதிரவிட்ட பொட்டலங்கள்
காரில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்திய 3 பேரை தஞ்சை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கோடியம்மன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் சிக்கிய காரை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது காரின் பின்புறத்தில் ரகசிய அறை அமைத்து அதில் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது, இதனையடுத்து காரில் இருந்த பால்பாண்டி, ரவிக்குமார், வீரப்பன் ஆகிய மூவரையும் கைது செய்து, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 103 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மேலும் இருவரை தேடி வருவதாகவும் தஞ்சை நகர துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.