இன்ஸ்டாவில் பிரேக்கப் செய்த காதலன் - ஸ்டேஷனுக்கு இழுத்து சென்ற போலீஸ்

Update: 2024-12-18 08:03 GMT

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே

இன்​ஸ்டாகிராம் மூலம் பழகி, இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், சென்னையில் பணிபுரிந்த ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியதால், இளம்பெண், பிரகாஷை சந்திக்க அடிக்கடி சென்னை சென்று வந்துள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், திடீரென காதலியை இளைஞர் கழற்றிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண், குமராட்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், இளைஞர் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்