திணறும் நீலகிரி மக்கள் - பாதிக்கும் முக்கிய விஷயங்கள் | Ooty

Update: 2024-12-18 07:49 GMT

திணறும் நீலகிரி மக்கள் - பாதிக்கும் முக்கிய விஷயங்கள்

உதகையில் நீர் பனி காரணமாக கடும் குளிர் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த சில நாட்களாக நீர் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தாவரவியல் பூங்கா,மார்க்கெட்,மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. காலையில் பணிக்கு செல்லும் கேரட் அறுவடை தொலிலாளர்கள், மார்க்கெட் தொழிலாளர்கள் குளிரை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். நீர்பனியின் காரணமாக நகரில் பால் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்