துண்டான சாலை...நோயாளிகளுக்கு நேரும் அவலங்கள் - அதிர்ச்சி காட்சிகள்
கொடைக்கானல் கீழான வயல் கிராமத்தில் நீர்த்தேக்க கரை உடைந்து துண்டான சாலையை சீரமைக்காததால் நோயாளிகளை மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்ல முடியாத அவலம் நிலவி வருகிறது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் புலி பிடித்தான் கானல் நீர்த்தேக்கம் நிரம்பி கரை உடைந்து வெள்ளம் பாய்ந்ததில் பாலம் உடைந்து
சாலை துண்டாகி போக்குவரத்து முடங்கியது...
இன்று பால்ராஜ் என்ற முதியவர் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரை மிகவும் சிரமப்பட்டு உறவினர்கள் துண்டான சாலையில் தூக்கிச் சென்றுள்ளனர். மேலும் கர்ப்பிணிகளும், நோயாளிகளும் கிராமத்தை விட்டு வெளியேற முடியாத சூழல் உள்ளது... இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு போர்கால அடிப்படையில் சாலையை துரிதமாக சீரமைத்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.