அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிகிச்சை மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை அவரது அறையில் விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், விக்னேஷ் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தினமும் வேலூர் சத்தூவாச்சாரி காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என விக்னேஷ்க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.