கோ- ஆப்டெக்ஸின் புதிய கட்டிடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் | DMK
சென்னை அண்ணாசாலையில் கோ- ஆப்டெக்சின் புதிய கட்டிடத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 5 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் 4 தளங்களுடம் கட்டப்பட்டுள்ள கோ- ஆப்டெக்சின் புதிய கட்டிடத்தில், முதல் விற்பனை மற்றும் பொங்கல் சிறப்பு விற்பனையை துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பட்டு, பருத்தி சேலைகள், வேட்டி துண்டுகள், ரெடிமேட் ஆடைகள், கைத்தறி பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.