அடுத்த தலைவலி... ஈபிஎஸ் வழக்கு.. `மாஸ்டர்' நீதிமன்றத்திற்கு மாற்றம்

Update: 2024-12-17 12:12 GMT

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை, திமுகவுடன் தொடர்புபடுத்தி எடப்பாடி பழனிச்சாமி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருவதால், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் பொதுத் தளத்தில் இருந்த தகவல்களின் அடிப்படையிலேயே ட்விட் செய்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, சாட்சி விசாரணையை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்