நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் பங்கேற்க வந்த சு.வெங்கடேசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன், தொலைபேசி மூலம் நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.