வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்.. 25 கிராமங்களுக்கு துண்டிக்கப்பட்ட முக்கிய விஷயம்
வேலூர் அருகே தொடர் கனமழையால் அமிர்தி தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், ஜவ்வாது மலைக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுஜவ்வாது மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கொட்டாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமிர்தி தரைப்பாலத்தை மூழ்கியபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அமிர்தி - ஜமுனாமரத்தூர் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதோடு, ஜவ்வாது மலை நோக்கி வரும் வாகனங்கள் அமிர்தி பூங்கா முன்பாக தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. இதனால் ஜவ்வாது மலை தொடரில் உள்ள 25க்கும் அதிகமான கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல கத்தாழம்பட்டு அருகே சிங்கிரி கோவில் தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட தரைப்பாலங்கள் அருகே மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.