பெஞ்சல் புயலால் நிலைகுலைந்த கிருஷ்ணகிரி, தருமபுரி.. சீற்றத்தை காட்டிய இயற்கை.. வெளியான அறிவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாண்புமிகு சு. முத்துசாமி அவர்களையும், தருமபுரி மாவட்டத்துக்கு மாண்புமிகு @SalemRRajendran அவர்களையும் நியமித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன். இம்மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் தொடர்ந்து பேசிக் கள நிலவரத்தைக் கண்காணித்து வருகிறேன். இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்! CycloneFengal ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புகளைப் பார்வையிட்டு, மக்களுக்கு உதவிட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொண்டிருக்கிறேன். கடலூர் மாவட்டத்தில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் மாண்புமிகு அமைச்சர் @MRKPanneer அவர்களைத் தொடர்புகொண்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினேன். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை மாண்புமிகு @evvelu அவர்களிடம் கேட்டறிந்தேன்.