"ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிராக நாடு தழுவிய கடையடைப்பு" - விக்கிரமராஜா எச்சரிக்கை
கடை வாடகை மீது 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்டவைகளுக்கு எதிராக நாடுதழுவிய
கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. மத்திய, மாநில அரசுகள் வணிகர் சங்கங்களை அழைத்து பேசி உரிய தீர்வு காணவேண்டும் என்றும் இல்லாவிட்டால், இரு அரசுகள் அரசு மீதான கொந்தளிப்பை ஏற்படுத்தும் என விக்கரமராஜா எச்சரித்துள்ளார். ஜிஎஸ்டி வரிப்பில் உள்ள குளறுபடிகளை
பயன்படுத்தி அரசு அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.