செய்யக்கூடாத வேலையை செய்த நபர்..பொளந்து கட்டிய லோக்கல் கைகள்..அதிர்ச்சி வீடியோ | Tirupathur
வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டை பகுதியில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவின் பேட்டரியை வடமாநில இளைஞர்கள் 3 பேர் கழட்ட முயன்றுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிடவே, வடமாநில கும்பல் தலைதெறிக்க தப்பி ஓட முயற்சித்துள்ளது. ஆனால் 3 பேரில் ஒருவர் மட்டும் வசமாக சிக்க, அவரின் கை, கால்களை கட்டி அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்த வந்த காவல்துறையினர் வடமாநில இளைஞரை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.