10ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை.. திடுக்கிடும் பின்னணியில் `அந்த’ முகம்

Update: 2024-12-18 04:33 GMT

திருக்கோவிலூரில் 10ஆம் வகுப்பு பள்ளி மாணவி குழந்தை பெற்றெடுத்த வழக்கில், பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு, வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து சென்று மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, உறவினர் வீட்டில் தங்கி மாணவி 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளியில் விடுவதாக சரக்கு வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறிய இளைஞர், மாணவியை காப்புக்காட்டுக்கு கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த‌து தெரிய வந்த‌து. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 24 வயது இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்