''கரண்ட் இல்ல குடிக்க தண்ணி இல்ல உயிருக்கே ஆபத்து''..புரட்டி போட்ட பேய் மழை மிதக்கும் 100 வீடுகள்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. 1-வது வார்டிற்கு உட்பட்ட கலைஞர் நகர் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இந்தக் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது. இடுப்பளவு தேங்கியுள்ள தண்ணீரில் வெளியே வர முடியாமல் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்ளும், மாடிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். தண்ணீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.