TNPSC தேர்வுகள்... வெளியான முக்கிய அறிவிப்பு | TNPSC

Update: 2025-01-01 06:37 GMT

#Exam | #TNPSC

TNPSC தேர்வுகள்... வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசு வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வு அட்டவணையை அடுத்த வாரம் டி.என்.பி.எஸ்.சி வெளியிட உள்ளது.குரூப்-1, குரூப்-2 , குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 15 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், 20க்கும் அதிகமான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 701 பேருக்கு அரசு வேலை வாய்ப்புகளை வழங்கிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், இந்த ஆண்டு 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் பல்வேறு போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்