பழவேற்காடு அருகே கரை ஒதுங்கிய மர்மபடகு..

Update: 2024-12-12 04:17 GMT

திருவள்ளூர் மாவட்டம் கோரைக்குப்பம் மீனவ கிராமத்தில், மர்ம படகு ஒன்று திடீரென கரை ஒதுங்கியது. மூங்கில்களால் செய்யப்பட்ட அந்த படகு, கடல் அலையில் அடித்து கொண்டு கரை ஒதுங்கியது. மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடலோர காவல் குழுமத்தினர், மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் படகை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அந்த படகு மியான்மர் நாட்டை சேர்ந்ததா அல்லது மியான்மரை சேர்ந்த யாரேனும் கடல் வழியாக வந்துள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்