டாட்டூ கலைஞர் ஹரிஹரன், தனது டாட்டூ ஷாப்பில் நாக்கு பிளவு அறுவை சிகிச்சை செய்ததால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், மருத்துவர்கள் இல்லாமல் டாட்டூ ஷாப்பில் நாக்கை 2 துண்டாக வெட்டி மாடிஃபிகேஷன் செய்தது மிகப்பெரிய தவறு என சிறைக்குச் சென்றபோது உணர்ந்ததாக தெரிவித்தார். பாடி மாடிஃபிகேஷனில் நிறைய ஆபத்துகள் இருப்பதாகவும், உயிரே போகும் நிலையும் கூட அதில் உள்ளது என்றும் அவர் கூறினார். தான் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருப்பதாக வதந்தி பரவியதாகவும், அதுபோன்ற தவறுகளை தான் செய்யவில்லை என்றும் அவர் கூறினார். பிரபல ரவுடிக்கும் தமக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானதாகவும், ஆனால், அவருடைய முகத்தை வரைய சொன்னதால், வரைந்தேனே தவிர, அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஹரிஹரன் கூறினார்.