பொங்கல் பரிசு புறக்கணிப்பு - வெறிச்சோடிய ரேசன் கடைகள்... பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம், மல்லியங்குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, மல்லியங்குப்பம் கிராமத்தினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும், மல்லியங்குப்பம் ஊராட்சி மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காமல் புறக்கணித்துள்ளனர். இதனால் நியாய விலை கடை வெறிச்சோடி காணப்படுகிறது. ஊராட்சியை, பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிடும் வரை அரசின் நலத்திட்டங்களை ஏற்க முடியாது என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.