"குழந்தையின் இதயத்தில்.." உச்சக்கட்ட கோவத்தில் மருத்துவமனையில் களேபரம்..வெளியான ஷாக்கிங் வீடியோ
திருத்துறைப்பூண்டியில் பிறந்த குழந்தைக்கு இருதய கோளாறு இருப்பதை ஆரம்ப நிலையிலேயே தெரிவிக்காததை கண்டித்து தனியார் மருத்துவமனையில் சிலர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணவேணி என்பவருக்கு தனியார் மருத்துவமனையில் கடந்த 5ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தைக்கு இருதய கோளாறு இருந்ததால், திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், குழந்தையின் உடல்நிலை குறித்து ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனக்கூறி, 10 பேர் சேர்ந்து தனியார் மருத்துவமனை மருத்துவர் ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சி அடிப்படையாக வைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக, குழந்தையின் தந்தை உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.