இனிதே நிறைவடைந்த தி.மலை கார்த்திகை தீப திருவிழா
திருவண்ணாமலையில் கடந்த 1ஆம் தேதி, துர்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கிய திருக்கார்த்திகை தீபதிருவிழா, நேற்று சண்டிகேஸ்வரர் வீதி உலாவுடன் நிறைவடைந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகத்தின் அட்டவணைப்படி கார்த்திகை தீப திருவிழா, இனிதே நிறைவடைந்தது. அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்டுள்ள மகாதீபம் மட்டும், வரும் 23ஆம் தேதி அணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.