கூலி தொழிலாளிக்கு வந்த ரூ. 2 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்.. - திருப்பத்தூரில் பரபரப்பு..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்துள்ள பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனவர் பாஷா மூட்டை தூக்கும் வேலையைச் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது நண்பரான காசிப் அகம்மது வங்கியில் லோன் வாங்கி தருவதாகவும் அதன் மூலம் ஆட்டோ வாங்கி ஒட்டு எனக் கூறி இருக்கிறார். இதனை நம்பிய முனவர் பாஷா தனது ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் காசிப் அகம்மதுவிடம் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்வர் பாஷாவுக்கு ஜிஎஸ்டியில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்து இருக்கிறது. அதில் முன்வர் பாஷா சென்னையில் பர்னீச்சர் கடை நடத்தி வருவதாகவும் அதற்கான வரி நிலுவைத் தொகை 2 கோடியே 22 லட்சத்து 95ஆயிரம் வரி கட்ட வேண்டும் என வந்து இருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த முன்வர் பாஷா இது காசிப் அகம்மதுவிடம் கூறிய போது பல்வேறு காரணங்களைக் கூறி சமாளித்து இருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த முன்வர் பாஷா இது குறித்து போலீஸில் புகார் அளித்து இருக்கிறார்.