கஜ பூஜைக்குப் பின்.. வீரநடை போட்ட தெய்வானை - மெய்சிலிர்த்து பக்தர்கள்.. அரோகரா முழக்கம்..
திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தெய்வானை தாக்கி யானை பாகன் மற்றும் அவரது உறவினர் இருவரும் உயிரிழந்த நிலையில் கஜ பூஜைக்குப் பின் ஒரு மாதம் கழித்து கோவில் யானை தெய்வானை நடைபயிற்சி மேற்கொண்டது. பாகன் இறந்ததை யானை மறப்பதற்காக யானை கட்டப்பட்டிருந்த அறையில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது யானை கட்டப்பட்டுள்ள வளாகத்தின் அருகிலேயே அழைத்து வரப்பட்டு இயற்கை சூழலை அனுபவித்து வருகிறது. இந்த நிலையில் சம்பவம் நடந்து ஒரு மாத காலம் ஆன நிலையில் இன்று யானை கட்டப்பட்டுள்ள குடிலில் வைத்து கஜபூஜையும் கணபதி ஹோமமும் நடந்தது. அப்போது யானை தெய்வானைக்கு துண்டு, வேட்டி, மாலை அணிவித்து புண்ணியானம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து 1 மாத காலத்திற்கு பிறகு யானையை மீண்டும் நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றனர். குமரன் விடுதி அமைந்துள்ள இடத்தில் 3 முறை தெய்வானை யானை வலம் வந்தது. அப்போது அங்கு நின்ற பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டனர்.