அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமினால், ஊழல் வழக்கு சாட்சிகள் அச்சமடைந்துள்ளனரா என்பது குறித்த மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம் நாளை மறுதினத்துக்கு தள்ளி வைத்துள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்றதால், வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமனற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது, ஏற்கெனவே
அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி ஏ.ஜி. மாசி இடம் பெறவில்லை. இதைத் தொடர்ந்து விசாரணையை நீதிபதி அபய் எஸ். ஒகா, டிசம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அமலாக்கத் துறை இணை இயக்குநர் கார்த்திக் தாசரி சார்பில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை தெளிவாக அவமதிக்கும் செந்தில் பாலாஜியின் செயல்பாடு பண மோசடி வழக்கின் விசாரணையை தாமதப்படுத்துவதையும், காலந்தாழ்த்துவதையும் தெளிவாக்குவதாக குறிப்பிட்டிருந்தார்.