செய்யக்கூடாத செயலை செய்த அதிகாரிகள் - வீட்டின் முன் இறங்கிய 5 பேர் | Thanjavur | CBI

Update: 2024-12-18 09:30 GMT

செய்யக்கூடாத செயலை செய்த அதிகாரிகள் - வீட்டின் முன் இறங்கிய 5 பேர் | Thanjavur | CBI

லஞ்ச ஒழிப்பு புகாரின்பேரில், ஜி.எஸ்.டி துணை ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர்கள் இருவரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் லஞ்ச ஒழிப்பு புகார் தொடர்பாக, மத்திய கலால் வரித்துறை அலுவலக கண்காணிப்பாளர்கள், மூன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், துணை ஆணையர் பொறுப்பு சரவணகுமாருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததன் அடிப்படையில் சிபிஐ அவரையும் கைது செய்தது. மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துணை ஆணையர் சரவணகுமாரின் இல்லம் அமைந்துள்ள தஞ்சை திருவிடைமருதூருக்கு, சி.பி.ஐ டிஎஸ்பி தலைமையில் 5 பேர் காரில் வந்தனர். வீடு பூட்டியிருந்ததால், சம்பந்தப்பட்டவர்களை வீட்டிற்கு வரச் சொல்லி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரவணகுமாரின் வீடு திறக்கப்பட்டதும் அங்கு ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்