கோர்ட்டுக்கு செல்லும் வழியில்... Dr*gs திருட்டு... Drug Cartelஆக மாறிய காவலர்... சென்னையில் அதிர்ச்சி
பாலசுப்பிரமணி, பாத்திமா என்று இரண்டு நபர்களை எழும்பூர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 700 கிராம்
சென்னையில் போதைப்பொருள் விற்பனை - போலீசார் கைது
சென்னை எழும்பூரில் 700 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த விவகாரம் -அருண்பாண்டியன் என்ற காவலர் கைது
நேற்று முன்தினம் பாலசுப்பிரமணி, பாத்திமா என்று இரண்டு நபர்களை எழும்பூர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 700 கிராம் மெத் போதை பொருள் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் பழைய வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் நீதிமன்ற காவலராக பணியாற்றி வரும் அருண் பாண்டியனை தற்போது கைது செய்துள்ளனர்.
பாலசுப்பிரமணி என்ற நபருக்கு மெத் போதைப்பொருளை சிறுக சிறுக கொடுத்தது விசாரணையில் தெரியவந்ததையடுத்து காவலர் அருண்பாண்டியன் கைது.
இதுவரை சென்னையில் மெத் போதை பொருள் வழக்கில் பரணி, ஜேம்ஸ், ஆனந்த், சமீர் என நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தார்போது ஐந்தாவது காவலராக தற்போது அருண்பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.