கிராம மக்களின் வயிற்றில் பாலை வார்த்த அறிவிப்பு..முடிவுக்கு வந்த 100 வருட போராட்டம் | Nilgirs
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, 100 வருட போராட்டத்திற்கு பின்னர் பழங்குடியின கிராமத்திற்கு மூன்றரை கோடி மதிப்பில் சாலை வசதி ஏற்படுத்தப்படுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக போஸ்பரா பகுதியில் இருந்து செம்பக்கொல்லிக்கு செல்ல மண் சாலையையே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். வனத்துறையினர் தடையில்லா சான்று அளிக்காததால் சாலை பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்த நிலையில், தற்போது தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, செம்பக்கொல்லியில் 3 கிலோமீட்டருக்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூஜை நடைபெற்றது.