சர்ச்சையை கிளப்பிய மகாவிஷ்ணு விவகாரம்..!இன்று வந்த முக்கிய அறிவிப்பு | Tamilnadu

Update: 2024-12-06 16:07 GMT

சமீபத்தில் சென்னையில் உள்ள அரசுப்பள்ளியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகாவிஷ்ணு நடத்திய சொற்பொழிவு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், விருந்தினர்களை அழைக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து, 28 பக்கங்கள் கொண்ட வழிகாட்டி நெறிமுறைகளை, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருக்கும், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர்கள் என்ற பட்டியலில் இருப்பவர்களை மட்டும் அழைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், முழுமையாக ஆய்வுசெய்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவிற்கு பரிந்துரை செய்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்பின்பும் பள்ளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள், மாணவர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் பட்சத்தில், உடனடியாக நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர்கள் நிறுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்