இனிமேல் இந்த ரயில் ஓடாது - அதிர்ச்சியில் பயணிகள்

Update: 2024-12-21 14:23 GMT

டெல்டா மாவட்ட மக்கள், 20 ஆண்டுகளாக போராடி பெற்ற தாம்பரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில் சேவை நிறுத்தப்பட்டிருப்பது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட திருச்சி - சென்னை இன்டர்சிட்டி ரயில் சேவைக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வரும் 26-ஆம் தேதியுடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாம்பரம் - கோவை வாராந்திர ரயிலில், பொதுப் பெட்டிகளும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பயணிகள், தொடர் போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் அறிவித்துள்ளனர். மீண்டும் தாம்பரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்