பறிபோன 50 உயிர்கள்... மீண்டும் அதே விபரீதத்தை செய்த முக்கிய குற்றவாளி... அதிர வைத்த கேங்

Update: 2024-12-21 13:50 GMT

கடலூரில் கள்ளச்சாராயம் அருந்தி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கின் முக்கிய குற்றவாளி, மீண்டும் மதுபானம் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார்.

மயிலம் கூட்டேரிப்பட்டு சந்திப்பில், மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து இரண்டாயிரத்து ஐநூறு மதுபான பாட்டில்களை கடத்தி வந்த இரண்டு பேர் பிடிபட்டனர். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, இருவரும் தப்பி ஓடினர். இதனையடுத்து மதுபாட்டில்கள் அனைத்தும் திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய நபர்களில் ஒருவர் புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த கவியரசன் என்பது தெரியவந்துள்ளது. இவர், கடலூர் புதுப்பேட்டையில் கள்ளச்சாராயம் அருந்தி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலியான வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்