"போத்தீஸ் சேலை தின இன்டெர் காலேஜ் ஃபெஸ்ட்" கோலாகலம்...

Update: 2024-12-21 13:02 GMT

நம் நாட்டின் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் பெண்கள் வாழ்வின் அங்கமாகவும் விளங்கும் சேலையை கவுரவிக்கும் வகையில் “போத்தீஸ் சேலை தின இன்டெர் காலேஜ் ஃபெஸ்ட்“ மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது... இவ்விழாவில் போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்... மின்மினி செயலி சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து விழாவில் பேசிய ரமேஷ், கல்லூரி மாணவிகள் சேலை அணிந்து கொண்டு இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியையும், பெருமையும் அளிப்பதாக பூரித்தார். தொடர்ந்து போத்தீஸ் சேலை தின இன்டெர் காலேஜ் ஃபெஸ்ட் மற்றும் ஹேஷ்டேக் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு போத்தீஸ் கிபிட் வவுச்சர்களையும் பரிசுக் கோப்பைகளையும் வழங்கி கௌரவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்