காப்பாற்ற பட்ட உயிர்கள்..விபரீதத்தை தடுத்த அந்த 3 பேர்.. சூப்பர் ஹீரோக்களுக்காக ஒலிக்கும் குரல்
செந்தூர் எக்ஸ்பிரஸை விபத்தில் இருந்த காப்பாற்றிய விவகாரத்தில், 3 ரயில்வே ஊழியர்களுக்கும் விருது வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் ஏ.ஜாபர் அலிக்கு, செந்தூர் எக்ஸ்பிரஸை விபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தாதன்குளம் கேட் பகுதியில் வெள்ளம் செல்வது பற்றி அறிந்ததும் முதலில் தகவல் தெரிவித்தவர்கள் விக்னேஷ், செல்வகுமார், கிருஷ்ணபெருமாள் ஆகிய மூவரும் தான். ரயில்வே ஊழியர்களுக்கான இவர்களுக்கும், அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதை வழங்கி கவுரவிக்க வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.