"வீடு விற்பனைக்கு!" ரூ.18 லட்சத்திற்கு விபூதி... வசமாக சிக்கி தில்லாலங்கடி பெண்
சென்னை ராயபுரத்தில் வீடு விற்பனைக்கு என விளம்பரம் செய்து அட்வான்ஸ் வாங்கிய ரூபாய் 18 லட்சத்தை திருப்பி தராமல் ஆட்டம் காட்டிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த அஸ்மிதா என்பவர் தனது வீடு விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் செய்துள்ளார். இதைபார்த்த மேனகா என்பவர் அட்வான்ஸ் ஆக 18லட்சத்து 50 ஆயிரம் ருபாயும் கொடுத்துள்ளார். ஆனால், வீட்டையும் விற்காமல் பணத்தையும் திருப்பி தராமல் அஸ்மிதா ஆட்டம் காட்டி வந்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் அஸ்மிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.