மொத்தமாக தலைகீழான நிலை... வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மயிலாடுதுறை...

Update: 2024-11-28 02:41 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உப்பனாறு பாலத்தில் இருபக்க கரை இல்லாததால் உட்புகுந்த கடல் நீர்,, குடியிருப்பு மற்றும் விளைநிலங்களை சூழ்ந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ராஜூவ்புரம் முதல் நண்டலாறு வரையிலான சாலையின் இரு புறமும் கடல் நீர் உட்புகுந்துள்ளதால் அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தரங்கம்பாடி உப்பனாற்றின் முகத்துவாரத்தையும் இரு கரைகளையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்