வெளிநாட்டு பெண்களை வைத்து ஹைடெக் பாலியல்.. Ex-DIG வீட்டில் அதிர்ச்சி.. சென்னையில் ஷாக்

Update: 2024-11-28 02:35 GMT

கோயம்பேடு, பாரதி அவன்யூ, மங்கம்மாள் நகர் பகுதியில் உள்ள ஒரு பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலையடுத்து கோயம்பேடு போலீசார் அந்த வீட்டிற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 9 வெளிநாட்டுப் பெண்களையும், அவர்களை சந்திக்க வந்த 3 ஆண்களையும் கைது செய்த போலீசார், அந்த வீட்டிலிருந்து 40 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் போதைப் பொருட்கள், 15 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து வெளிநாட்டு பெண்களை வரவழைத்து செல்போன் செயலி மூலம் பாலியல் தொழில் நடத்தி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, அந்த வீடு, ஓய்வு பெற்ற டிஐஜி ராமச்சந்திரன் என்பவரின் மகன் விக்ரம் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் தனது நண்பர் அருண் மூலமாக நிர்மலா என்ற இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டை விருந்தினர் விடுதியாக நிர்மலா பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்