3வது திருமணத்துக்கு தயாரான பெண் சாமியார் அன்னபூரணி.. மாப்பிள்ளை யாரு தெரியுமா?

Update: 2024-11-28 02:25 GMT

திருவண்ணாமலையில் சர்ச்சை சாமியார் அன்னபூரணி ஆசிரமத்தில் அவருடைய திருமணத்திற்கு ஏற்பாடுகள் தடல் புடலாக செய்யப்பட்டு வருகிறது.

ராஜா தோப்பு பகுதியில் அன்னபூரணி அரசு ஆசிரமம் நடத்திவருகிறார். போலி சாமியார் என விமர்சனங்கள் இருந்தாலும், அன்னபூரணி அம்மன் போல் வேடம் அணிந்து போஸ் கொடுப்பதும், அவரது காலில் விழுந்து வணங்குபவர்கள் எண்ணிக்கை குறையாமல் செல்ல ஆசிரமம் ஒவ்வொரு நாளும் விரிவடைகிறது.

இந்த வேளையில், அன்னபூரணி நீண்டகாலமாக தன்னோடு இருக்கும் ரோகித்தை துணையாக கரம் பிடிக்கிறார். அவர்கள் திருமணம் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் நிலையில், ஆசிரமத்தில் வாழை மரங்கள், பேனர்கள், ஒலி, ஒலி அமைப்பு, கண்வர் விளக்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரோகித்தும், அன்னபூரணியும் ஆசிர்வதிக்கும் விதமான போட்டோ அடங்கிய பேனரோடு, தெய்வீக திருக்கல்யாணத்துக்கு வாங்க என அவரது பக்த கோடிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்னபூரணியை திருமணம் செய்யும் ரோகித், அவருடைய முன்னாள் கணவர் அரசுவின் புதிய பரிணாமம் என்றும் பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபஞ்சத்திலேயே அற்புதமான நிகழ்வு நடைபெற போகிறது, தெய்வீக சங்கமத்திற்கு குடும்பத்தோடு வாங்க என்று அன்னபூரணியின் பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்