தாறுமாறான கனமழை.! - கண்ணீர் சிந்தும் டெல்டா விவசாயிகள்..

Update: 2024-11-28 02:27 GMT

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பயிர்கள் அதிக அளவு சேதம் அடைந்துள்ளது. வலங்கைமான், நார்த்தங்குடி, ஆலங்குடி, பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிர்கள் இடுப்பளவு மழை நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், கிடங்கல் ஊராட்சியில் தாழ்வான பகுதிகளிலும் விவசாய நிலங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் பாசன வாய்க்காலாகவும், வடிகால் வாய்க்காலாகவும் உள்ள கிடங்கல் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் வயலுக்குள் புகுந்துள்ளதால், 150 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள சம்பா தாளடி நடவு பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என்று வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாக உடைப்பை சரி செய்து, வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்