ஊரை விட்டே ஒதுக்கியதால் ஆத்திரம்..வெடித்த மோதல்..பரபரப்பு சிசிடிவி காட்சி | CCTV

Update: 2024-12-18 07:45 GMT

கொக்கிலமேடு ஊராட்சி துணை தலைவர் ராஜாத்தியிடம், கழிவுநீர் கால்வாயை உயர்த்தி கட்டியது தொடர்பாக, மீனவர்கள் சிலர் தகராறு செய்தனர். இந்த விவகாரத்தில் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி ஊராட்சி துணை தலைவர் ராஜாத்தி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட ஏழு குடும்பம் ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டனர். புகைந்து கொண்டே இருந்த இந்த பிரச்சினை தொடர்பாக, மீண்டும் இரு தரப்பு மீனவர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் ஒரு தரப்பு ஊராட்சி துணை தலைவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மற்றொரு தரப்பைச் சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், 25-க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்