அர்ஜுன் சம்பத் கைது...! மாணவர்கள் மீது வழக்கு பதிவு? - அடுத்தடுத்து வெடிக்கும் பூகம்பம்
பொதுவெளியில் அவதூறாக பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் ஓம்கார் பாலாஜியை போலீசார் கைது செய்தனர். அதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த இந்து மக்கள் கட்சியினர் அனுமதி கோரிய நிலையில், அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, தடையை மீறி பல்வேறு இடங்களில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், கோவையில் மாவட்ட ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சியினர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை கைது செய்தனர்.