போதைப்பொருள் கடத்தல் வழக்கு..! மன்சூர் அலிகான் மகன் சொன்ன அதிமுக்கிய தகவல் | Chennai
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கை, சென்னை ஜெ.ஜெ. நகர் போலீசார், டிசம்பர் 4ஆம் தேதி கைது செய்தனர். அவரின் ஜாமீன் மனுவை அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அலிகான் துக்ளக், ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், போதைப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் தன்னை போலீசார் கைது செய்துள்ளதாகவும், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.