கொட்டும் மழையில் நனைந்தபடி அங்காளம்மனுக்காக காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று ஊஞ்சல் உற்சவத்திற்காக இரவு 10:30 மணிளவில் பூசாரிகள் கோயில் வழக்கப்படி உற்சவர் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது பரவசமடைந்த பக்தர்கள் ஓம் சக்தி.. அங்காளம்மா தாயே.. அருள் புரிவாயே என்று முழங்கியபடி தேங்காய் தீபம் , நெய்தீபம் ஏற்றி அங்காளம்மனை வழிபட்டனர். சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.
அண்டை மாநிலங்களான புதுச்சேரி,ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் மேல்மலையனூர் அங்காளம்மனை தரிசனம் செய்தனர்