ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவின் பாதத்தின் புகைப்படத்தை 3,200 ரூபாய்க்கு விற்பதாக இணையத்தில் பரவிய விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈஷாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், சத்குரு பாதம் போட்டோ என 3200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. "குருவின் பாதங்கள் போற்றப்படுவதாகவும், அவை குருவின் ஆற்றலை அணுகுவதற்கான பாதை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு இணையத்தில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.